இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து
பதிவு : நவம்பர் 29, 2021, 07:43 PM
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்த‌து.
கான்பூரில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 345 ரன்கள் சேர்த்த‌து. இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த‌து. 49 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 234 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 284 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான இன்று நியூசிலாந்து வீர‌ர்கள் தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், நியூசிலாந்து அணி 165 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த‌ நிலையில், ஒரு விக்கெட் மிச்சம் இருந்த‌து. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் 3ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.

பிற செய்திகள்

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : 4 மணி நேரம் 42 நிமிடம் நீடித்த ஆட்டம்

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ரஷ்யாவை சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ் முன்னேறி உள்ளார்.

45 views

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: ரோகித் கேப்டன்சியில் விளையாடும் கோலி!

மே. தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் - இந்திய அணி அறிவிப்பு.. ரவி பிஷ்னோய், தீபக் ஹூடாவிற்கு புதிதாக வாய்ப்பு...பும்ரா, ஷமி இருவருக்கும் தொடரில் ஓய்வு

121 views

ஐசிசி புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு

சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ளது.

15 views

(26-01-2022)இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(26-01-2022)இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

31 views

ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் காலிறுதி போட்டிகள் - முதன்முறையாக அரையிறுதியில் இகா ஸ்வைடெக்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் பிரிவில் முதன்முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று போலந்து வீராங்கனை இகா ஸ்வைடெக் அசத்தியுள்ளார்.

8 views

அமெரிக்க வீராங்கனை காலின்ஸ் வெற்றி - அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்

அமெரிக்க வீராங்கனை டேனியல் காலின்ஸ் எளிதில் வெற்றி பெற்றார். பிரான்ஸ் வீராங்கனை கார்னெட்டை எதிர்கொண்ட அவர், 7க்கு 5 மற்றும் ஆறுக்கு ஒன்று என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.