மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்
பதிவு : நவம்பர் 29, 2021, 02:59 PM
பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...
பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்... 

வீட்டிற்குள் முடக்கப்படும் பெண்கள், மறுக்கப்படும் உரிமைகள்... மருமகள்களின் உயிர் பறிக்கும் வரதட்சனை... 

இந்த கொடுமைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு முயற்சியும் கொண்டாடப்பட வேண்டியவை... அத்தகைய முயற்சியில் தொடர்ந்து வெற்றி கண்டு வரும் மாவட்டமாக உள்ளது, ஹரியானாவின் ஹிசார் மாவட்டம்... 

பெண் குழந்தைகளையும், மருமகள்களையும் பெருமையாக எண்ணி கொண்டாடும் கிராமத்தினர், தங்கள் வீட்டு முன்பு அவர்களின் பெயர்பலகையை வைப்பதன் மூலம் தங்களது பெண் குழந்தைகளால் இன்று வெளியுலகத்திற்கு அடையாளம் காணப்படுகின்றனர்.. 

பிபிபூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுனில் என்பவரது முயற்சியால் பிரபலமடைந்த இந்த திட்டத்தால், இன்று மய்யட் கிராமத்தில் உள்ள ஆயிரத்து 500 வீடுகள் முன்பு பெண்களின் பெயர்பலகைகள் இடம்பெற்றுள்ளன. 

இது மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களையும் சேர்த்து மொத்தம் 17 ஆயிரம் வீடுகளின் முன்பும் தங்கள் மகள்கள் அல்லது மருமகள்களின் பெயர்பலகைகளே இடம்பெற்றுள்ளன. 

இதனால் குடும்பத்தில் நல்ல இணக்கமான சூழலும், மாமியார் - மருமகள்களுக்கு இடையே ஏற்படும் தகராறுகளும் குறைந்து வருவதோடு, பெண்கள் தங்களுக்கான உரிமைகளை விட்டு கொடுக்காமல் பயணிக்க இந்த திட்டம் பெரிதும் உதவுகிறது. 

 'மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டும்'  என்றார் கவிமணி... 

தற்போது மகள்கள் பிறப்பதெல்லாம் வரம் என்பதை உணர்வு பூர்வமாக ஏற்று கொண்டாடி மகிழ்கின்றனர், இன்றைய தலைமுறை பெற்றோர்கள்... 

பெண்களின் பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதை சமீபத்தில் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு வெளிப்படுத்தியது.  

பெண்களை கொண்டாடும் இந்த தேசத்தில், அவர்களுக்கான சமநிலையும், முன்னுரிமையும் கிடைக்க பல போராட்டங்கள் நடந்தன. இன்றும் பல போராட்டங்கள் தேவைப்படுகிறது... 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.