திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
பதிவு : நவம்பர் 28, 2021, 03:57 PM
திருவள்ளூரில் மழை பாதித்த பகுதிகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. கூவம் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, திருவேற்காடு பத்மாவதி நகரில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அங்கு வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதியை ஆய்வு செய்தார். மேலும், முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதேபோல், பூந்தமல்லியிலும் முதலமைச்சர் ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவினார். தொடர்ந்து, கூவம் நதியை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து மற்ற பகுதிகளையும் பார்வையிட்டார்.  இந்த ஆய்வின்போது, முதலமைச்சருடன், பால்வளத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளுர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


பிற செய்திகள்

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை வெளியேற்ற வேண்டும் - சுகாதாரத்துறை சுற்றறிக்கை

12 views

"பழனி கோவிலில் இதுவரை 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்"

தமிழகத்தில் 5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பழனியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

18 views

ஜன.24 ஆம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு? - இன்று மாலை தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் வருகிற 24ம் தேதி முதுநிலை மருத்துவ படிப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

13 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

20 views

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - பழனி கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

5 நாட்களுக்கு பின் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

13 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.