புதிய கொரோனா வைர​ஸ் - ஆயத்தமாகும் அரசு
பதிவு : நவம்பர் 27, 2021, 05:33 PM
தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதிக எச்சரிக்கையுடன் இருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என
பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா சூழல் மற்றும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் நிலை குறித்து மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் குறித்தும் அதன் பண்புகள் மற்றும் பிற நாடுகளில் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

உருமாற்றம் அடைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து  பொதுமக்கள் அதீத எச்சரிக்கையுடன் இருப்பதோடு, முக கவசம் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைத்து பயணிகளையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர் அபாயத்திற்கு உரியவை என வகைப்படுத்தப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

மாநிலங்களில் தேவையான மருந்துகள் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய மாநிலங்களுடன் அதிகாரிகள் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்திய பிரதமர் 

ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் வென்டிலேட்டர் கள் போன்றவை முறையாக செயல்படுவதையும் மாநிலங்களுடன் இணைந்து உறுதி செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

பிற செய்திகள்

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

12 views

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

PRIME TIME NEWS || புதிய வீடியோவால் குழப்பம் முதல் தடுப்பூசி விற்பனைக்கு அனுமதி வரை | இன்று (27-01-22)

9 views

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

(27-01-2022) PRIME TIME HEADLINES | இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் | Night Headlines | Thanthi TV

23 views

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2022) | 7 PM Headlines | Thanthi TV | Night Headlines

55 views

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு

நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரளா உயர்நீதிமன்றம் வரும் புதன்கிழமை வரை தடை விதித்துள்ளது.

13 views

இளம்பெண்ணை வன்கொடுமை செய்து மொட்டை அடித்த சம்பவம் - ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர்

டெல்லியில் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கருப்பு பொடியை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.