கள்ளக்காதல் ஜோடிக்கு நடந்த பயங்கரம் - பட்டினி போட்டு கட்டி உதைத்த ஊர் மக்கள்
பதிவு : நவம்பர் 27, 2021, 05:10 PM
கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் கள்ளக்காதல் ஜோடியை பட்டினி போட்டு ஊர் மக்களே கட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மைசூரு அருகே உள்ள ஹொம்மேராகா கிராமத்தில் திருமணமான பெண் ஒருவர், பக்கத்து கிராமத்து இளைஞர் ஒருவருடன்  தகாத உறவில் இருந்துள்ளார். இருவரும் தனிமையில் இருந்ததை அறிந்த கிராம மக்கள் 2 பேரையும் பிடித்து கிராமத்திற்கு மத்தியில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்தனர். பின்னர் 2 நாட்களுக்கு உணவு எதுவும் கொடுக்காமல் அவர்கள் பட்டினி போட்டு தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  போலீசார், 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.