திமுக எம்.பி. ரமேஷ் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு
பதிவு : நவம்பர் 26, 2021, 04:53 AM
கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக எம்.பி. ரமேஷ் வழக்கு - நீதிமன்றம் உத்தரவு 

கடலூர் திமுக எம்.பி. ரமேஷ் மீதான கொலை வழக்கின் விசாரணையை விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில், திமுக எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.இந்நிலையில், சிபிசிஐடி முறையாக விசாரிக்காததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோவிந்தராஜூவின் மகன் செந்தில்வேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, சிபிசிஐடி விசாரணை முறையாக நடைபெறுவதாகவும், புதிய விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஆய்வாளர் சுந்தரராஜன் நியமிக்கப்பட உள்ளதாகவும், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் வாதிட்டார்.இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி நிர்மல்குமார், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி புதிய விசாரணை அதிகாரி, தன் விசாரணையை தொடரலாம் எனவும், அதை விழுப்புரம் கூடுதல் எஸ்.பி. கண்காணிக்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

திமுக எம்.பி.க்கள் கூட்டம் - 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யக் கோரி, திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

27 views

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கு - திமுக எம்பிக்கு ஜாமின்

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி. ரமேஷூக்கு ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

24 views

மு.க.ஸ்டாலின் தலைமையில் 21ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் வரும் 21ந் தேதி, திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

17 views

திமுக வட்டச் செயலாளர் அலுவலகம் சூறை - ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்ற 2 பேர் கைது

சென்னை திமுக வட்டச் செயலாளர் அலுவலகத்தை சூறையாடி பணத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 views

பிற செய்திகள்

"முதல்வரான பிறகு சம்பாதித்து கட்டிய வீடுகள்" சொத்துக்களை அரசுடைமை ஆக்கலாம் - திருநாவுக்கரசர், காங்கிரஸ்

"முதல்வரான பிறகு சம்பாதித்து கட்டிய வீடுகள்" சொத்துக்களை அரசுடைமை ஆக்கலாம் - திருநாவுக்கரசர், காங்கிரஸ்

7 views

பல்வேறு பகுதிகளில் கனமழை.. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

19 views

ரசிகர்களுக்காக இளையராஜா வெளியிட்ட புதிய பாடல்

ரசிகர்களுக்காக இசைஞானி இளையராஜா பியானோ வாசிக்கும் காட்சி இணைய தளங்களில் பரவி வருகிறது.

30 views

நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை?

தொடர்மழை காரணமாக நாளை 13 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

154 views

தீபாவளி சிட்பண்ட் நடத்தி பணம் மோசடி - குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய தடுப்பூசி விபரம்

சென்னையில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி பண மோசடி செய்த பெண்ணை, கொரோனா தடுப்பூசி செலுத்திய தகவலை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

15 views

பள்ளி ஆசிரியர் மரணத்திற்கு காரணம் என்ன? - தீவிர விசாரணை நடத்தும் போலீசார்

திருச்சி அருகே பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.