"உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும்" - பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை
பதிவு : நவம்பர் 26, 2021, 01:26 AM
"உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும்" - பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை
"உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும்" - பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் சுற்றறிக்கை

வெளிநாட்டு பள்ளிகளில் படித்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கு உடனடியாக அட்மிஷன் வழங்க வேண்டும் என, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கொரோனாவிற்கு பிறகு வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய இந்திய குடும்பங்கள், தாய் நாட்டிற்கு அதிக அளவில் திரும்புகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கல்வி பாடத் திட்டங்கள், சிபிஎஸ்இ பாடத் திட்டங்களுக்கு நிகரானதா என்பதை ஒப்பிட்டு பார்த்து, சிபிஎஸ்இ அனுமதி பெற்றபின்  மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் நடைமுறை இருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் காரணமாக தற்போது இந்தியா திரும்பும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மேலும் எந்தெந்த வெளிநாட்டு பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ பாடத் திட்டங்களுக்கு நிகரானவை என்ற விபரங்களையும் இணையத்தளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், பள்ளிகள், மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 

பிற செய்திகள்

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவர் - கணவனைத் தேடி மனைவி, மகன் பயணம்

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவனை மனைவியும், மகனும் கிராமம் கிராமமாக தேடி வருகின்றனர்.

0 views

"தேசத்திற்கு முதல் முன்னுரிமை அளிக்கும் பாஜக" - பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் உள்ள சில அரசியல் கட்சியினர் தங்களின் சுய நலத்தை எப்போதும் முன்வைப்பதாகவும் பாஜக தேசத்திற்கு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

6 views

இ-வணிக நிறுவனங்கள் மீது 2% டிஜிட்டல் வரி - இந்தியா, அமெரிக்கா இடையே உடன்படிக்கை

பன்னாட்டு இ-வணிக நிறுவனங்கள் மீது மத்திய அரசு விதித்த 2 சதவீத டிஜிட்டல் வரி தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட மோதல்கள் முடிவடைந்துள்ளது.

9 views

புதிய வேலைகளில் சேர ஒரே EPF கணக்கு... விதிகளில் திருத்தம்

தொழிலாளர்கள், இதர ஊழியர்கள் வேலை மாறும் போது இனி புதிய இ.பி.எப் கணக்குகளை தொடங்க தேவையில்லை.

9 views

பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையை மரத்தடியில் விட்டு சென்ற அவலம்

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையை சாலையோர மரத்தடியில் விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

9 views

இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து தாக்கிய கும்பல் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், 4 பேர் கைது

ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சி நபர் ஒருவரை, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.