பலமிழந்த காங். - கால் பதிக்கும் திரிணாமுல்... 2024 - தேர்தலை குறி வைக்கும் மம்தா
பதிவு : நவம்பர் 25, 2021, 04:11 PM
தனது டெல்லி பயணத்தின்போது சோனியா காந்தியை சந்திக்காத மம்தா... திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்... மேகாலயாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்...
தனது டெல்லி பயணத்தின்போது சோனியா காந்தியை சந்திக்காத மம்தா... திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்... மேகாலயாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த காங்கிரஸ்... என அடுத்தடுத்து தேசிய அரசியலில்  ஏற்படுள்ள அதிர்வலைகள்....

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய மம்தா அலை தேசிய அரசியலில் மீண்டும் வீச தொடங்கியுள்ளது. 

மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தின் போதே, 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் போது, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் திரிணாமுல் கட்சி களமிறங்கும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தார், மம்தா. 

தற்போது தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓர் அணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டு வரும் மம்தா... அதற்கான யூகங்களையும் வகுத்து வருகிறார்.  திரிபுரா மற்றும் கோவா மாநில சட்டமன்ற தேர்தல்களை குறிவைத்து, அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது, திரிணாமுல் காங்கிரஸ். 

இந்நிலையில், மம்தாவின் மூன்று நாள் டெல்லி பயணம், பிரதமர் மோடியுடனான சந்திப்பு என அடுத்தடுத்த நகர்வுகள் தேசியளவில் கவனம் பெற்றன. பிரதமர் மோடியை சந்தித்த கையோடு, உத்தர பிரதேசம் மற்றும் மும்பையை  நோக்கி திரும்பியுள்ளது மம்தாவின் பார்வை. 

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு உதவ தயார் என அறிவித்த மம்தா, வரும் 30ம் தேதி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரை மும்பையில் சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பலரும் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவி  வரும் நிலையில், கடந்த முறை டெல்லி பயணத்தின் போது, சோனியா காந்தியை சந்தித்த மம்தா, இம்முறை அவரை சந்திக்கவில்லை.

இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டெல்லி வரும்போதெல்லாம் சோனியாவை சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற பதிலளித்திருந்தார், மம்தா. இந்நிலையில், மேகாலயாவில் 17 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறிந்துள்ளது, திரிணாமுல் காங்கிரஸ். 

அங்கு முன்னாள் முதலமைச்சர் முகுல் சங்மா தலைமையில் 11 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளனர். 

இதனால் 2023 ஆம் ஆண்டு நடைபெறும் மேகாலயா சட்டமன்ற தேர்தலிலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கை ஒங்கும் என தெரிகிறது. இது பல்வேறு மாநிலங்களிலும் தனது கட்சியை நிலைநிறுத்த போராடி வரும் மம்தாவிற்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

592 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

121 views

பிற செய்திகள்

நாடாளுமன்றத்தில் "எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுகிறது" - திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் நெறிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக, திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சிறை தண்டனைக்கு வகை செய்யும் சட்டப்பிரிவு" - திமுக எம்பி கவுதம சிகாமணி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதாவில் நீண்ட ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என, திமுக எம்பி கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

10 views

"தமிழகம் மருத்துவ சுற்றுலா மையமாக திகழ்கிறது" - அதிமுக எம்.பி ரவீந்திரநாத்

மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் திகழ்வதாக, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

8 views

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா "அவசர, அவசரமாக நிறைவேற்ற துடிப்பது ஏன்?" - காங்.எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா பாகுபாடு கொண்டது என, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

10 views

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

13 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.