கலைஞர் உணவகம் - தமிழக அரசு திட்டம்
பதிவு : நவம்பர் 25, 2021, 03:55 PM
தமிழகத்தில் 500 கலைஞர் உணவகம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசிடம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையலறை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 650 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருவதாகவும், வருங்காலத்தில் கூடுதலாக 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு உணவகத்திற்கு மாதம் மூன்றரை லட்சம் ரூபாய் வரை செலவிடப்படுவதாகவும் தெரிவித்தார். உணவு வழங்கும் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்த மத்திய அரசு 100 சதவீதம் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02/12/2021) | Headlines | Thanthi TV

11 views

"மக்கள் விரும்பினால் கிராமப்புற சாலைகள் விரிவு படுத்தப்படும்" - அமைச்சர் முத்துசாமி

கிராமப்புற பொதுமக்கள் தங்களது பட்டாவுடன் ஒருங்கிணைந்து வந்தால் மாடி வீடுகள் கட்டித் தரப்படும் என்று, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

10 views

சட்டமன்ற குழு பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக சட்டமன்ற குழுக்களின் பணிகளை கண்காணிக்க டெல்லியில் இருந்து சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

8 views

இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களை கண்காணிக்க உத்தரவு

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் குழந்தைகளிடம் தவறான வழியில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

8 views

"அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை" - நரிக்குறவர் இன மக்கள் வேதனை

கள்ளக்குறிச்சி அருகே, நீலமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக நரிக்குறவர் இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

11 views

விரைவில் "5 மாவட்டங்களில் நெல் அரைக்கும் குடோன்கள் - அமைச்சர் சக்கரபாணி உறுதி

பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் ஐந்து மாவட்டங்களில் தினமும் 500 மெட்ரிக் டன் நெல் அரைக்கும் குடோன்கள் அமைக்கப்படும் என, உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.