தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
பதிவு : நவம்பர் 25, 2021, 03:35 PM
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுசேரி மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, புதுவை பகுதிகளில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, ராமேஸ்வரத்தில் 8 சென்டி மீட்டர் மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, திருக்குவளை பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இன்றும் நாளையும் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1322 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

320 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

44 views

பிற செய்திகள்

திடீரென தீப்பிடித்த கார் - உயிர்தப்பிய குடும்பம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

16 views

கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கோவையில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

7 views

மழை நிலவரம் என்ன? - வரைப்படம் மூலம் விளக்கம்

மழை நிலவரம் என்ன? - வரைப்படம் மூலம் விளக்கம்

37 views

"மது போதையில் திருடுகிறார்கள்" - ஆடு வளர்ப்பவர்கள் வேதனை

ஆடு திருடர்களால்சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் ஆடு திருட்டு பாதிப்பு குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்

19 views

இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

58 views

கணித ஆசிரியர் திடீர் தற்கொலை - மாணவி தற்கொலையில் தொடர்பா?

கரூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அப்பள்ளியின் கணித ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.