வேதா நிலையம் - கையகப்படுத்திய சட்டம் ரத்து
பதிவு : நவம்பர் 25, 2021, 10:10 AM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலைய சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டன. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும், வேதா நிலையத்துக்கு இழப்பீடாக உரிமையியல் நீதிமன்றத்தில் டிபாசிட் செய்யப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாயை அரசுக்கு திருப்பி வழங்க வேண்டும் எனவும்,வேதா நிலையத்தின் சாவியை மூன்று வாரங்களில் மனுதாரர்களான தீபா, தீபக் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கியை சட்டப்படி வசூலிக்க வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

338 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

49 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

21 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

10 views

பிற செய்திகள்

கோவை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமின்

கோவையில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு போக்சோ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

7 views

"ஒற்றை கலாசாரத்தை கொண்டு வர பாஜக முயற்சி"- திருமாவளவன் குற்றச்சாட்டு

தேசிய கல்வி கொள்கை மூலம் ஒரே தேசம் ஒரே கல்வி என்னும் திட்டத்தை கொண்டு வர பாஜக அரசு முயற்சிப்பதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

36 views

"தக்காளி விலை விரைவில் குறையும்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விரைவில் தக்காளி விலை குறையும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார்.

8 views

வயலில் மாடு மேய்ந்ததால் பிரச்சினை; இருதரப்பு மோதல் - 8 பேர் படுகாயம்

தஞ்சை மாவட்டம் வெண்டையம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

8 views

பழமையான கலை பொருளை திருடி விற்பனை; இருவர் கைது - சிறையில் அடைப்பு

சென்னையில் பழமையான கலை பொருளை திருடி விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 views

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இலங்கை தமிழர்கள் முகாமில் வசிக்கும் மக்களுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.