சிறு கோளை தாக்கி திசை திருப்ப முயற்சி - நாசா நிறுவனம் அனுப்பும் விண்கலம்
பதிவு : நவம்பர் 24, 2021, 05:44 PM
விண்வெளியில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறு கோள் ஒன்றின் மீது மோதி அதை திசை திருப்ப, விண்வெளி கலம் ஒன்றை அமெரிக்காவின் நாசா நிறுவனம் இன்று அனுப்பியுள்ளது.
விண்வெளியில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறு கோள் ஒன்றின் மீது மோதி அதை திசை திருப்ப, விண்வெளி கலம் ஒன்றை அமெரிக்காவின் நாசா நிறுவனம் இன்று அனுப்பியுள்ளது.எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம், நாசாவின் டார்ட் விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்டது. பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் 525 அடி அகலம் கொண்ட டிமோர்போஸ் என்ற சிறு கோள் ஒன்றின் மீது இந்த விணகலம், 2022 செப்டம்பரில் மோத உள்ளது. பூமியில் இருந்து 1.1 கோடி கிலோமீட்டர் தூரத்தில் இந்த மோதல் நடைபெறும். இதன் மூலம், இந்த சிறிய கோளின் பாதையை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் பூமியை தாக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும், சிறு கோள்கள், விண்வெளி கற்கள் போன்றவற்றை திசை திருப்பும் தொழில் நுட்பங்களை உருவாக்க முடியும்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.