தீண்டாமை சுவர் எழுப்பிய விவகாரம்; பெண்ணை கல்லால் தாக்கும் காட்சி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி
பதிவு : நவம்பர் 22, 2021, 11:40 PM
சேலம் அருகே கடந்த வாரம் தீண்டாமை சுவர் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டபோது, பெண் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சேலம் அருகே கடந்த வாரம் தீண்டாமை சுவர் தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டபோது, பெண் ஒருவர் கல்லால் கொடூரமாக தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 


சேலம் அருகே நங்கவள்ளியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பயன்படுத்தி வந்த சாலையை ஆக்கிரமித்து தனியார் கல்லூரி நிர்வாகம் ஒன்று சுவர் எழுப்பியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அம்பேத்கார் நகர் மக்கள் இரவோடு இரவாக தடுப்புச் சுவரை இடித்து அகற்றினர். இதனால் மற்றொரு தரப்பினர் கடந்த 17-ஆம் தேதி அம்பேத்கர் நகருக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டதால் இரண்டு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.இதில் ஐந்து பேர் காயமடைந்த மருத்துவ சிகிச்சை பெற்றனர். இதுதொடர்பாக இரண்டு தரப்பினரை சேர்ந்த 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகராறில் பெண்ணொருவர் அப்போது கல்லால் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில்
 பரவி வருகிறது.

பிற செய்திகள்

"ஒவ்வொரு மனிதனின் கவலையையும் தீர்க்கும் அரசு" - முதலமைச்சர் ஸ்டாலின்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

10 views

குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி - சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு

சேலத்தை சேர்ந்த விவசாயி பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயன்றதால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

10 views

எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவம் - அமைச்சர் நேரு, ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆறுதல்

திருச்சியில் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதனின் குடும்பத்தினரை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

10 views

"முதலீடுகள் ஈர்க்க திட்டம்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

14 views

பாலியல் துன்புறுத்தல் - கடும் நடவடிக்கை; "மாணவர்கள் நலன் முக்கியம்" - அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

பாலியல் அத்துமீறல் விவகாரத்தில் யார் தவறு செய்து இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

17 views

அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர் மாற்றம்

கட்சியின் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் "எம்.ஜி.ஆர் மாளிகை" என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.