திருச்சி அகோரி மணிகண்டன் பெண் அகோரியை திருமணம் செய்தார்
பதிவு : நவம்பர் 22, 2021, 08:52 AM
திருச்சியில் அவ்வப்போது சுடுகாட்டில் சடலங்கள் மீது அமர்ந்து வினோத பூஜைகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய அகோரி, தனது சிஷியையான பெண் அகோரி பிரியங்காவை திருமணம் முடித்துள்ளார்.
திருச்சியில் அவ்வப்போது சுடுகாட்டில் சடலங்கள் மீது அமர்ந்து வினோத பூஜைகளை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய அகோரி, தனது சிஷியையான பெண் அகோரி பிரியங்காவை திருமணம் முடித்துள்ளார். திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தை சேர்ந்தவர் மணிகண்டன்... காசி சென்று அகோரி பயிற்சிபெற்ற அவர் உய்யக்கொண்டான் ஆற்றின் கரையோரம் ஜெய் அகோர காளி கோவிலை கட்டி பூஜை நடத்தி வருகிறார்.இவர் அண்மையில் சுடுகாட்டில் விபத்தில் உயிரிழந்த சிஷ்யரின் உடல் மீது அமர்ந்து ஆத்மசாந்தி பூஜையை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டும் அகோரி மணிகண்டன் இறந்த தனது தாயார் உடல் மீது ஏறி சம்மணமிட்டு அமர்ந்து பூஜை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் சிறப்பு பூஜை நடத்துவதை வழக்கமாக கொண்ட அகோரி மணிகண்டனிடம், கொல்கத்தாவை சேர்ந்த பிரியங்கா என்ற பெண், கடந்த 8 ஆண்டுகளாக அகோரியாக பயிற்சி பெற்றுள்ளார். 
இந்நிலையில் மணிகண்டனுக்கும், சிஷியை பிரியங்காவுக்கும் திருமணம் நடைபெற்றது.காளி கோவிலில் பிற அகோரிகள் மேளம் அடிக்க, சங்கொலி, ஹர ஹர மகாதேவா கோஷம் முழங்க இரு அகோரிகளும் திருமணம் செய்துக்கொண்டனர்.  அகோரி கோலத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை அகோரி மணிகண்டனின் குருவான மதுரை பால்சாமி என்பவர் நடத்திவைத்தார். திருமணம் முடிந்ததும் யாகம் நடத்திய அகோரிகள், சிறப்பு பூஜைகளையும் நடத்தினர்.


தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

323 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

36 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

20 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

9 views

பிற செய்திகள்

உலக மீனவர் தினத்தையொட்டி நீச்சல் போட்டி - 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு

உலக மீனவர் தினத்தையொட்டி நாகையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

9 views

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் - தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிகள் மும்முரம்

விழுப்புரம் திருப்பாச்சனூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை சீரமைக்கும் பணி மும்முராக நடைப்பெற்று வருகிறது.

5 views

"மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்" - நாம்தமிழர் கட்சி சீமான் வேண்டுகோள்

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யும்படி கட்சியினருக்கு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

6 views

தேங்கிய மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

ஆம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

7 views

கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் - பத்திரமாக மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத்துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

8 views

12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை விவகாரம் - பெற்றோரை சந்தித்து எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆறுதல்

கரூரில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவியின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.