நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி - சம்யுக்த கிஷான் மோர்ச்சா அறிவிப்பு
பதிவு : நவம்பர் 22, 2021, 07:44 AM
திட்டமிட்டபடி வரும் 29 -ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி, விவசாயிகளின் பேரணி நடைபெறும் என்று, சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி வரும் 29 -ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி, விவசாயிகளின் பேரணி நடைபெறும் என்று, சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறும், அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிங்கு எல்லையில் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த போராட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். 
அதன்படி லக்னோ எல்லைப் பகுதிகளில் இன்று போராட்டமும், 26 ஆம் தேதி விவசாயிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கூறினார்.  இதுபோல 29 ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறும் எனவும், பல்பீர் சிங்,  தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து 27ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Noon Headlines | Thanthi TV

4 views

இளமையில் தோல்வி, முதுமையில் வெற்றி... காதலியை தேடி சென்ற பவர் பாண்டி...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

17 views

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

43 views

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

(04/12/2021) காலை 7 மணி தலைப்புச் செய்திகள்

28 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

43 views

65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...

ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

1059 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.