"அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்படும்" - கல்வி இயக்குநரகம் அறிவிப்பு
பதிவு : நவம்பர் 22, 2021, 01:52 AM
டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக, அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.
டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக, அடுத்த உத்தரவு வரும் வரை அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்படும் என கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி முதல் ஒரு வார காலம் பள்ளிகள் மூடப்படும் என்றும், அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிகள் திறப்பிற்கான தடையை நீட்டித்து கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் வழி கல்வி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.