திட்டமிட்டபடி வரும் 29-ம் தேதி பேரணி - சம்யுக்த கிஷான் மோர்ச்சா அறிவிப்பு
பதிவு : நவம்பர் 21, 2021, 06:56 PM
திட்டமிட்டபடி வரும் 29 -ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி, விவசாயிகளின் பேரணி நடைபெறும் என்று, சம்யுக்த கிசன் மோர்ச்சா அறிவித்துள்ளது.
மூன்று வேளாண்மை சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிங்கு எல்லையில் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாய சங்கத் தலைவர் பல்பீர் சிங், வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த போராட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். 
அதன்படி வரும் 22-ம் தேதி லக்னோ எல்லைப் பகுதிகளில் போராட்டமும், 26 ஆம் தேதி விவசாயிகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளதாக கூறினார்.  இதுபோல 29 ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெறும் எனவும் பல்பீர் சிங்,  தெரிவித்தார். மேலும், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து 27 ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
==

பிற செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை - பக்தர்கள் வருகை அதிகரிப்பு

சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து, பம்பை பகுதியில் இருமுடி கட்ட தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.

11 views

வனத்துறை ரோந்து பணிக்காக புதிய பைக் - கர்நாடகா என்.ஐ.டி. மாணவர்கள் அசத்தல்

வனத்துறை ரோந்து பணிக்காக பல்வேறு வசதிகளுடன் ஈ-பைக் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

10 views

வேளாண் சட்டம் ரத்து - கங்கனா அதிருப்தி

3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இம்முறையும் சர்ச்சைக்குரிய வகையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

13 views

சமூகவலை தளம் மூலம் காதல் - இளைஞர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது

கேரளாவில், வாலிபர் முகத்தில் ஆசிட் வீசிய பெண் கைது செய்யப்பட்டார்.

16 views

வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டம்: ரூ.3 லட்சம் இழப்பீடு - சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

9 views

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

கனமழை காரணமாக "ரூ.4 கோடி அளவுக்கு இழப்பு" - திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தகவல்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.