ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை : வருத்தம் தெரிவித்த 'ஜெய் பீம்' இயக்குனர்
பதிவு : நவம்பர் 21, 2021, 05:20 PM
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை என்று கூறியுள்ளார்.ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்துக் கொள்ளப்படும் என நான் அறியவில்லை என்றும்,1995ஆம் ஆண்டை பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கம் என்றும் கூறியுள்ளார்.குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக காலண்டர் படத்தை காட்ட வேண்டும் என்பது எங்களுடைய நோக்கமும் அல்ல,சில விநாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் படம் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை என்று கூறியுள்ளார்.பெரிய திரையில் படத்தை பார்த்த போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட படம் வெளியாகும் முன்பே அதை மாற்றியிருப்போம் என்றும், நவம்பர் 1ஆம் தேதி படம் வெளிவந்ததும் காலண்டர் படம் பற்றி அறிந்தவுடன் அதை மாற்ற முயற்சி மேற்கொண்டேன் என்றும் கூறியுள்ளார்.யாரும் கேட்பதற்கு முன்பே காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்பது புரியும் என்று நம்பினேன் என்றும்,ஜெய் பீம் திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்,இயக்குனராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு நடிகர் சூர்யாவை பொறுப்பேற்க சொல்வது துரதிருஷ்டவசமானது என்றும் இயக்குநர் ஞானவேல் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


பிற செய்திகள்

நடிகர் சூர்யாவுக்கு பாடகர் திருமூர்த்தி ஆதரவு - டுவிட்டரில் வீடியோ வெளியிட்ட திருமூர்த்தி

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

4 views

ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - மும்பை நீதிமன்ற ஜாமின் நகலில் தகவல்

போதை பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லையென மும்பை நீதிமன்றம் ஜாமின் உத்தரவில் தெரிவித்துள்ளது.

10 views

"திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜியின் பங்களிப்பு அளப்பரியது" - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் பங்களிப்பு அளப்பரியது என சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

10 views

52-வது சர்வதேச திரைப்பட விழா - "எம்.ஜி.ஆர், சிவாஜியின் பங்களிப்பு அளப்பரியது" -மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு

திரைத்துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்றோர் பங்களிப்பு அளப்பரியது என சர்வதேச திரைப்பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

25 views

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள 'எதற்கும் துணிந்தவன்' - படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

19 views

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் - ஒற்றுமையின் குரல் பாடல் வெளியீடு

மாநாடு திரைப்படத்தின் ஒற்றுமையின் குரல் பாடல் வெளியாகி உள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.