பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு.!
பதிவு : நவம்பர் 21, 2021, 01:07 AM
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதுவரை இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இதுவரை இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.


பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, இன்று தேசிய வீட்டு வசதி தினம் கொண்டாடப்பட்டது. இதன்படி பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வீடுகள் கட்ட பூமி பூஜை, கிரக பிரவேசம் மற்றும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் குறித்து விழிப்புணர்வு போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைவருக்கும் வீடு வழங்கும் இலக்கை உறுதி செய்ய, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகளுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2022ஆம் ஆண்டுக்குள் 2 கோடியே 95 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 63 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.