கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்
பதிவு : நவம்பர் 20, 2021, 04:18 PM
கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம்
கணவரை உயிருடன் புதைத்த மனைவி - கணவர் சொன்னதை தான் செய்ததாக வாக்குமூலம் 

சென்னையில் கணவரை குழியில் போட்டு மனைவியே மூடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் 8 வது தெருவை  சேர்ந்தவர் நாகராஜ். 60 வயதான இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராக இருந்து வந்தார். கடந்த 17 ஆம் தேதி நாகராஜூக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழக்க போவதாகவும், அதனால் தன்னை கொல்லைப்புறத்தில் உள்ள குழியில் புதைத்து விடுமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. கணவர் கேட்டுக் கொண்டதன் பேரில் மனைவி லட்சுமியும் அவ்வாறே செய்துள்ளார். இதனிடையே 19ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய மகள் தமிழரசி, தந்தை எங்கே என கேட்டதற்கு நடந்ததை தாய் கூறவே அதிர்ந்து போனார் மகள். உடனே பெரும்பாக்கம் போலீசாரிடம் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரோடு இருந்த நபரை குழியில் போட்டு மூடிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது... அதேநேரம் இது கொலையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவர் - கணவனைத் தேடி மனைவி, மகன் பயணம்

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கணவனை மனைவியும், மகனும் கிராமம் கிராமமாக தேடி வருகின்றனர்.

16 views

பிற செய்திகள்

பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

10 views

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

48 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

15 views

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

38 views

"6- 7 முறை நில அதிர்வை உணர்ந்தோம்" - நில அதிர்வு... மக்கள் பீதி...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஒரே மாதத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

23 views

"திமுகவைவிட அதிகம் கஷ்டப்பட்டது யாரும் இல்லை"

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக திமுக பல தியாகங்கள் செய்து இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கூறி உள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.