சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த விவகாரம் - அமைச்சரின் கருத்தால் மீண்டும் சர்ச்சை
பதிவு : நவம்பர் 20, 2021, 02:25 AM
சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறியதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
சபரிமலை தீர்த்தத்தை அவமதித்த கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என கூறியதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை ஒன்றாம் தேதியான நவ., 16 ஆம் தேதி அதிகாலை நடை திறந்தபோது கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் சன்னிதானத்தில் இருந்தார்.  அப்போது வழங்கப்பட்ட தீர்த்தத்தை ராதாகிருஷ்ணன் குடிக்காமல் அதை இரண்டு கைகளிலும் தேய்த்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராதாகிருஷ்ணன், தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாது என்றும் சிறு வயதில் இருந்தே தான் கோவிலுக்கு சென்றதில்லை எனவும் கூறியுள்ளார். இது  பக்தர்களிடம் மேலும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள அமைச்சரே இப்படி பேசலாமா என்றும் கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவரை தேவசம் அமைச்சராக நியமிக்காதது ஏன்' எனவும் பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.