கன மழை வீடு இடிந்து 9 பேர் பலி - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
பதிவு : நவம்பர் 20, 2021, 02:21 AM
தொடர் மழை காரணமாக வேலூரில் வீடு இடிந்து விழுந்ததில், குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் மழை காரணமாக வேலூரில் வீடு இடிந்து விழுந்ததில், குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர்,பேரணாம்பட்டு நகரம், அஜீஜியா தெருவைச் சேர்ந்தவர் அனீஷா பேகம். இவர் தனது பழைமையான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வீட்டு மாடியில் 2 குடும்பத்தினர் வாடகைக்குத் தங்கியிருந்துள்ளனர். தொடர் கனமழையால், அப்பகுதியில் 4 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், இன்று காலை அனீஷா பேகத்தின் வீடு திடீரென சரிந்து விழுந்து தரைமட்டமானது. இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடிகள் அகற்றப்பட்டு 4 குழந்தைகள் மற்றும் 5 பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு வந்த அமைச்சர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா  50 ஆயிரமும்  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிடப்படுள்ளதாக கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.