சீன ராணுவம் உருவாக்கிய புதிய கிராமம் - அருணாச்சல பிரதேச எல்லையில் உருவாக்கம்
பதிவு : நவம்பர் 20, 2021, 02:16 AM
இந்திய, சீன எல்லைப் பகுதியில், இரண்டாவது முறையாக, புதிய கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.
இந்திய, சீன எல்லைப் பகுதியில், இரண்டாவது முறையாக, புதிய கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.

2020 ஜூன் மாதத்தில், லடாக்கில் உள்ள இந்திய, சீன எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமான வீரர்கள் பலியாகினர். அருணாச்சல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடுவதால், இந்தியா, சீனா இடையே வட கிழக்கு பகுதியிலும் எல்லைப் பிரச்சனை தொடர்கிறது. கடந்த ஆண்டில், அருணாச்சலப் பிரதேசத்தின் சாரி சூ நதிக் கரையில் 100 வீடுகள் கொண்ட புதிய கிராமம் ஒன்றை சீன ராணுவம் உருவாக்கியது. இந்நிலையில், அதற்கு 93 கிலோ மீட்டர் மேற்கே, ஷி யோமி மாவட்டத்தில், 60 வீடுகளை கொண்ட புதிய கிராமம் ஒன்றை சமீபத்தில் உருவாக்கியுள்ளது. இதன் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்திய புதிய கிராமம், சீனாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தலைமையகம் விளக்கம் அளித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.