அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்
பதிவு : நவம்பர் 19, 2021, 07:29 PM
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்
அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் - 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி, மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீப திருவிழா கடந்த 10ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் மகா தீபா நிகழ்வை ஒட்டி, விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சுவாமிகள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மாலை 6 மணிக்கு, 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. செப்பினால் செய்யப்பட்ட, 175 கிலோ எடை கொண்ட தீப கொப்பரை, 2 ஆயிரத்து 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த தீப கொப்பரையில், 7 ஆயிரத்து 150 கிலோ நெய், 22 கிலோ கற்பூரம், ஆயிரத்து 200 மீட்டர் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் 11 நாட்கள் மலை மீது ஏற்றப்படும் நிலையில், அப்போது சேகரிக்கப்படும் தீப மை, ஆருத்ரா தரிசனத்தன்று சுவாமிக்கு வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்வில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பிற செய்திகள்

"முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

"முன்னாள் அமைச்சர் சரோஜாவுக்கு எதிராக கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது" - மோசடி புகாரில் சரோஜா முன் ஜாமின் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

25 views

"ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது" - உயர்நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்

17 views

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நரிக்குறவர்; உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

சிறையில் அடைக்கப்பட்டிருந்த நரிக்குறவர் சக்திவேல், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

17 views

வேப்பனஹள்ளியில் தொடர் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

26 views

வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் - கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

19 views

"காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும்" - வானிலை ஆய்வு மைய இயக்குனர்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.