மனைவி பற்றி அவதூறு பேச்சு - கதறி அழுத சந்திரபாபு நாயுடு
பதிவு : நவம்பர் 19, 2021, 07:07 PM
தமது மனைவியை பற்றி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவதூறாக பேசியதால், அம்மாநில எதிர்கட்சி தலைவரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, முதல்வராகாமல் அவைக்குள் வர மாட்டேன் என சபதமிட்டு வெளியேறினார்.
ஆந்திர மாநில சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை அவை தொடங்கியதும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அம்பதி ராம்பாபு, தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திர பாபு நாயுடு மற்றும் அவரது மனைவி குறித்தும் அவதூறான, நாகரிகமற்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சந்திரபாபு நாயுடு சபையை விட்டு வெளியேறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
தனது மனைவியைப் பற்றித் தரக்குறைவாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் பேசியதை சபாநாயகர் கண்டிக்காமல் பார்த்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்,  தமக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறிய சந்திரபாபு நாயுடு, தம்முடைய 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் இது போன்று வருத்தப்பட்டது இல்லை என வேதனை தெரிவித்தார். ஆளும் கட்சி உறுப்பினர்கள் தவறான வார்த்தைகளால் தமது மனைவியை பேசியதாக கூறிய சந்திரபாபு நாயுடு, செய்தியாளர்கள் முன்னிலையில் கதறி அழுதார். இனி மீண்டும் முதல்வரான பின்பே, அவைக்குள் வருவேன் என சபதம் எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
========

பிற செய்திகள்

"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

"அரசு வேலைவாய்ப்பை மட்டும் நம்பி இருக்கக்கூடாது" - அமைச்சர் சிவசங்கர்

36 views

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு வேண்டுகோள்

திமுகவினர் அனைவரும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களை காப்பாற்ற உழைத்திட வேண்டும் என உரிமையோடு கேட்டு கொள்வதாக, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.

40 views

மழை பாதிப்புகளைப் பார்வையிட்ட கே.என்.நேரு - நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எவ்வித திட்டப்பணிகளும் மேற்கொள்ளாதது தான் தற்போதைய மழை பாதிப்பிற்குக் காரணம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

99 views

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

70 views

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

32 views

அரசு நிறுவனங்களை சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு வர வேண்டும் - கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் எம்பி

அதிகார மையங்களை, சென்னையில் இருந்து மற்றப்பகுதிகளுக்கு பிரித்து கொடுத்தால், சென்னையில் நெரிசல் குறையும் என்று, காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.