"வங்கிகளின் பலம் பன்மடங்கு அதிகரிப்பு" - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : நவம்பர் 19, 2021, 01:44 AM
இந்திய வங்கிகளின் பலம், பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய வங்கிகளின் பலம், பன்மடங்கு அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற தடையின்றி கடன் வழங்குதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உருவாக்குதல் குறித்த மாநாட்டில் பிரதமர் மோதி நேரில் கலந்து கொண்டார். மத்திய நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில்  வங்கிகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 7 ஆண்டுகளில் வங்கித்துறையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சீர்திருத்தங்களின் விளைவாக வங்கித்துறை மிகவும் வலிமையான நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் வங்கிகளின் வாராக்கடன் மற்றும் மறு மூலதனம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அவற்றில் வலிமையை அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள வங்கிகளின் பலம் பன்மடங்கு அதிகரித்திருப்பதாகவும் அப்போது பிரதமர் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.