"இந்தியாவின் ஒவ்வொரு அம்சமும் கடந்த 2 ஆண்டுகளில் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது" - பிரதமர் நரேந்திர மோடி
பதிவு : நவம்பர் 19, 2021, 01:36 AM
தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்களில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் மருந்து தயாரிப்புத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலாவது உலக உச்சிமாநாட்டை பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைத்தார். அப்போது மருந்து துறை உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அவர் கலந்துரையாடினார்.மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் வாழ்க்கை முறை, மருத்துவம், தடுப்பூசி, மருத்துவ தொழில் நுட்பங்கள் என சுகாதாரத்துறையின் ஒவ்வொரு அம்சமும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் கவனம் பெற்று இருப்பதாக தெரிவித்தார். 
இந்திய மருத்துவத்துறை பல்வேறு சவால்களை எதிர் கொண்டு உயர்ந்து இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர் உலகத்தின் நம்பிக்கையை இந்திய சுகாதாரத்துறை பெற்று உலகின் மருந்தகமாக மாற்றி இருப்பதாக தெரிவித்தார்.  புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான மருத்துவ சாதனங்கள் போன்றவற்றில் இந்தியாவை தலைமையாக உருவாக்குவதே நமது தொலைநோக்கு பார்வை என பிரதமர் மோடி குறிப்பிட்டார். 
இந்திய மருந்து துறையை புதிய உச்சங்களை கொண்டு செல்லும் திறன் படைத்தவர்களாக எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்களை இந்தியா பெற்றிருப்பதாக புகழாரம் தெரிவித்தார். தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் இந்த எல்லையை இந்தியா வெற்றி கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.