பாமக மாவட்ட செயலாளர் படுகொலை வழக்கு; "தொடர்புடைய 15 பேரும் கைது" - முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தகவல்
பதிவு : நவம்பர் 18, 2021, 02:15 PM
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் தொடர்புடைய 15 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி கடந்த 22 ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருநள்ளாறு போலீசார், முக்கிய குற்றவாளியான மணிமாறன் , ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கலியமூர்த்தி, ராமச்சந்திரன், அருண் உள்ளிட்ட 14 பேரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். மயிலாடுதுறையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நகாரிகா பட், இதுவரை 15 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அனைவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

45 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

38 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

14 views

பிற செய்திகள்

7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

143 views

தொடர் மழை - வைகை அணைக்கு நள்ளிரவில் கிடுகிடுவென நீர்வரத்து உயர்வு

தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

33 views

விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள்; ராகி, சோளப் பயிர்களை தின்று அட்டகாசம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பயிர்களைத் தின்று விளைநிலங்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மாரச்சந்திரம் கிராமத்தில் ராகி மற்றும் சோளப் பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன.

19 views

"மழை காலத்தில் நோய் பரவும் அபாயம்"; "பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" - தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

மழை காலங்களில் வைரஸ், பாக்டிரியாவால் நோய் பரவ வாய்ப்பு இருப்பதால் பொது மக்கள் பாதுகாப்போடு இருக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

16 views

தேனி அருகே வழக்கறிஞர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்

தேனி அருகே பழிக்குப்பழியாக வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

21 views

புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.