காதல் திருமணம் செய்து கொண்ட மகளால் விரக்தி - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கு போட்டு தற்கொலை
பதிவு : நவம்பர் 17, 2021, 01:42 PM
ஈரோடு அருகே மகள் காதல் திருமணம் செய்த விரக்தியில் ஒரு குடும்பமே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு அருகே மகள் காதல் திருமணம் செய்த விரக்தியில் ஒரு குடும்பமே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை, கோட்டையக்காடு  பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரின் கணவர் சின்னசாமி, கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். 
இதையடுத்து தன் 2 மகள்களுடன் வசித்து வந்தார் சரஸ்வதி. இதில் மூத்த மகள் அமுதாவிற்கு வடிவேல் என்பவருடன் திருமணமாகி 9 வயதில் தனன்யா என்ற மகள் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக தன் கணவரை பிரிந்த அமுதா தன் தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். மேலும் அமுதா பெருந்துறை அடுத்த சரளை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் அவரது மகள் தனன்யா 5-ம்  வகுப்பு படித்து வந்தார்.சரஸ்வதியின் 2 வது மகளாக பூவிழி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதலுக்கு சரஸ்வதி குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும் சில நாட்களுக்கு முன்பாக வீட்டை விட்டு வெளியேறிய பூவிழி தன் காதலனை திருமணம் செய்துள்ளார். மகளின் இந்த செயலால் அதிர்ந்து போனார் சரஸ்வதி. பூவிழியின் முடிவை நினைத்து அவரது சகோதரி அமுதாவும் அதிர்ந்து போனார். ஆசையாய் வளர்த்த மகளின் இந்த முடிவு அவரை பெரிதும் பாதிக்கவே, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் சரஸ்வதி. முதலில் தன் பேத்தி 
தனன்யாவை தூக்கில் தொங்கவிட்ட அவர், பின்னர் தானும், தன் மகளும் என அடுத்தடுத்து தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர். இதனிடையே  திருமணம் செய்து கொண்ட பூவிழி தன் தாய்க்கு போன் செய்த போது அவர் எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், உடனே அக்கம்பக்கத்தினருக்கு போன் செய்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவர்கள் சென்று பார்த்த போது 3 பேரும் அடுத்தடுத்து தூக்கில் தொங்கியபடி கிடந்தனர். 3 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

297 views

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் - காலிறுதியில் நார்வே வீரரை வீழ்த்தி அசத்தல்

வியன்னா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இத்தாலியை சேர்ந்த முன்னணி வீரர் ஜெனிக் சின்னர் முன்னேறி உள்ளார்.

27 views

பீமன் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; "ஆற்றில் குளிக்க வேண்டாம்" - பொதுமக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பீமன் அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

25 views

இளைஞர் படுகொலை என குற்றச்சாட்டு - போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

24 views

பிற செய்திகள்

இளைஞர் படுகொலை என குற்றச்சாட்டு - போலீசார் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டதாக கூறி தொடர்ப்பட்ட வழக்கில், கன்னியாகுமரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிக்கையை தாக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

24 views

மாணவிக்கு பாலியல் தொல்லை -மருத்துவர் கைது

கரூரில் நிர்வாகியின் மகளை தனியறைக்கு வரவழைத்து அத்துமீறிய மருத்துவர் ரஜினிகாந்த், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

39 views

கிணற்றுக்குள் கார் பாய்ந்த விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு

தருமபுரி அருகே கிணற்றிற்குள் கார் பாய்ந்து நிகழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன..

44 views

"வீடு வாங்க சேமித்து வைத்த பணம்; 1800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளேன்" - நடிகர் விஷால்

சொந்த வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை ஆயிரத்து 800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

20 views

"பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை ஜெய்பீம் திரைப்படம் உலகறிய செய்துள்ளது" - சூர்யாவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு

ஜெய்பீம் படக்குழுவினருக்கு, துணை நிற்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

13 views

ஜெய்பீம் விவகாரம் - நடிகர் நாசர் அறிக்கை

ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் விலை பேச முற்படுவது வேதனை அளிப்பதாக நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

160 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.