"பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை ஜெய்பீம் திரைப்படம் உலகறிய செய்துள்ளது" - சூர்யாவுக்கு இயக்குநர் வெற்றிமாறன் ஆதரவு
பதிவு : நவம்பர் 17, 2021, 04:30 AM
ஜெய்பீம் படக்குழுவினருக்கு, துணை நிற்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம் படக்குழுவினருக்கு, துணை நிற்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை ஜெய்பீம் திரைப்படம் உலகறிய செய்துள்ளதாகவும்,

சமூக நீதிக்காக தனது நிஜ வாழ்க்கையிலும் குரல் கொடுப்பவர் நடிகர் சூர்யா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமுதாயத்தில் மாற்றத்தை விரும்பாதவர்கள் ஜெய்பீம் படத்தை எதிர்ப்பது இயல்புதான் என கூறியுள்ள வெற்றிமாறன்,

சமூகத்தில் உள்ள சமத்துவமின்மை மற்றும் அநீதியை கேள்வி கேட்கும் எந்தவொரு திரைப்படமும், சமூக நீதிக்கான ஆயுதம்தான் என கருத்து தெரிவித்துள்ளார்.

நட்சத்திர பிம்பத்தை மாற்றி அமைத்த நட்சத்திரம் நடிகர் சூர்யா என்றும்,

ஜெய்பீம் படக்குழுவுக்கும், நடிகர் சூர்யாவுக்கு நாங்கள் துணை நிற்பதாகவும் வெற்றிமாறன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.