ஜின்பிங்கை சந்திக்கவுள்ள பைடன் - காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை
பதிவு : நவம்பர் 15, 2021, 01:00 PM
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காணொலி காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திக்க உள்ளார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை காணொலி காட்சி வாயிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று சந்திக்க உள்ளார். சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவல், வர்த்தகப் போர், மற்றும் தைவானுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பியவை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் கசப்பு நீடித்து வருகிறது. சீன மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொலைபேசியில் உரையாடிக் கொண்ட போது, இரு நாடுகளும் தைவான் மீதான தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். அப்போது சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ  தைவான் பிரச்சினையில் தவறான நோக்குடன் அமெரிக்கா செயல் படுவதாகத் தெரிவித்ததுடன், தைவான் சுதந்திரப் படைகளுக்கு அவர்கள் தரும் ஆதரவு இறுதியில் அவர்களுக்கே எதிர்வினையாற்றும் என்று கடுமையாக சாடினார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆன்டனி பிளின்கென், தைவான் மீதான சீன அரசின் இராணுவ, மற்றும் பொருளாதார அழுத்தங்கள் குறித்து கவலை தெரிவித்தார். இந்நிலையில், இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் பொருட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் இன்று காணொலிக் காட்சி வழியாக சந்தித்துப் பேச உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

371 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

83 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது

7 views

ஜெர்மனியில் கொரோனா 4 வது அலை - கொரோனாவை மறந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

ஜெர்மனியில் கொரோனா 4வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

268 views

பிரசவ வலியுடன் சைக்கிள் ஓட்டிச் சென்ற எம்.பி - அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்

நியூசிலாந்து நாட்டில் பிரசவ வலியுடன் சைக்கிளை ஓட்டிச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

14 views

சீனாவில் மீண்டும் கொரோனா பேரலை... அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள்

கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மீண்டும் சீனாவில் கொரோனா பேரலை ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

26 views

"ஒமிக்ரான்" பெயருக்கு பின் சீன அதிபரா?

சீன அதிபரின் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக புதிய வகை கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என் பெயரிடப்பட்டுள்ளது.

24 views

மாயாஜால பள்ளி வடிவிலேயே ஒரு கேக் - ஹாரி பாட்டர் பட பாணியில் விநோத முயற்சி

மிகப் பெரிய கேக் செஞ்சு சாதனை படைக்கணும்னு மனக்கோட்டை கட்டி கேள்விப்பட்டிருப்பீங்க. கோட்டை சைஸ்லயே கேக் செஞ்சு பார்த்திருக்கீங்களா? வாங்க பாக்கலாம்...

84 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.