டெல்டா சேதம் - நாளை அறிக்கை சமர்ப்பிக்கும் அமைச்சர்கள் குழு
பதிவு : நவம்பர் 15, 2021, 12:58 PM
வடகிழக்கு பருவமழையால், டெல்டா மாவட்ட பயிர் பாதிப்பு குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர்கள் குழு நாளை சமர்பிக்க உள்ளது.
வடகிழக்கு பருவமழையால், டெல்டா மாவட்ட பயிர் பாதிப்பு குறித்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர்கள் குழு நாளை சமர்பிக்க உள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை கொட்டியதில், டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதம் ஏற்பட்டது. பாதிப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு கடந்த 11.ம் தேதி அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 7 அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர். பெரியகருப்பன், ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் நேரடியாக களத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர்கள் குழு ஆய்வு செய்த நிலையில்,  முதலமைச்சரும் ஆய்வு செய்துள்ளார். இதனிடையே, அமைச்சர்கள் குழு, விரிவான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய உள்ளது. அதில், மாவட்டம் வாரியாக பயிர் சேதம், கால்நடை பாதிப்பு, வீடு சேதம், காப்பீடு தொகை பெறுவதில் உள்ள சிக்கல் ஆகியவை குறித்து இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

360 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

78 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

46 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

18 views

பிற செய்திகள்

சாலையோரக் கடையில் தேநீர் அருந்திய ஸ்டாலின் - நிவாரண நிதி வழங்கிய சிறுவன்

மூர்த்தி நகர் பகுதியில் உள்ள சாலையோரக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.

24 views

"திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்"

முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னால், 50 ஆண்டுகாலம் திமுகவை சுமக்க இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

12 views

அமைச்சருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - மா.சுப்பிரமணியனுக்கு முதல்வர் வாழ்த்து

மருத்துவ துறையில் திறம்பட செயல்பட்டதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

130 views

திருவள்ளூரில் மழை பாதிப்பு பகுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

திருவள்ளூரில் மழை பாதித்த பகுதிகளை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

7 views

தொடர் மழையால் கடும் பாதிப்பு - படகுகள் மூலம் மக்கள் மீட்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை, படகுகள் மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

6 views

ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

ஓசூர் அருகே ஒற்றை யானை புகுந்ததால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.