ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியா வருகை - இந்தியாவுக்கு வரும் எஸ். 400 ஏவுகணை...
பதிவு : நவம்பர் 15, 2021, 12:09 PM
ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கிருந்து எஸ். 400 நவீன ஏவுகணைகள் இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அங்கிருந்து எஸ். 400 நவீன ஏவுகணைகள் இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சீனா, பாகிஸ்தான் என இருபுற பாதுகாப்பு சவால்களை சமாளிக்கும் வகையில் இந்தியா முப்படைகளையும் நவீனப்படுத்தி வருகிறது. விமானப்படையின் பலத்தை மேலும் அதிகரிக்க சுமார் 38 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷ்யாவிடம் இருந்து 5 எஸ். 400 ஏவுகணைகளை வாங்க கடந்த 2018 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. 
அமெரிக்காவின் பொருளாதார தடை எச்சரிக்கைக்கு மத்தியிலும் மத்திய அரசு ரஷ்யாவிடம் இருந்து ராணுவ எஸ்-400 ஏவுகணையை வாங்குவதில் உறுதியாக இருந்தது.ரஷ்யாவும் திட்டமிட்டப்படி 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் முதல் எஸ்-400 ஏவுகணையை இந்தியாவுக்கு வழங்குவோம் எனக் கூறி அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியது.தற்போது எஸ்-400 ஏவுகணை கட்டமைப்பு உபகரணங்கள் ரஷ்யாவிலிருந்து வான் வழியாகவும், கடல் வழியாகவும் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்த உபகரணங்கள் அசம்பிளிங் செய்யப்பட்டதும், ஏவுகணை மேற்கு எல்லையில் நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதின் வரும் டிசம்பர் மாதம் 2 வது வாரம் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக இருநாட்டு வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான முதல் 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையை மாஸ்கோவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையை அடுத்து புதின் இந்தியா வரும் போது ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

160 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

61 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

31 views

பிற செய்திகள்

மிரட்டும் புதிய வகை கொரோனா வைரஸ்...! - தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம்

தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் எந்த நாடுகளுக்கு எல்லாம் பரவியுள்ளது என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

23 views

சீனாவா... தைவானா... யாருக்கு ஆதரவு...? - சாலமன் தீவுகளில் நடப்பது என்ன...?

சாலமன் தீவில் சீனாவுடன் கைகோர்த்து செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து ஆஸ்திரேலியா படையை அனுப்பியுள்ளது.

17 views

95வது நன்றி தெரிவிக்கும் நாள் - ராட்சத பலூன்கள் பறக்கவிடப்படும் நிகழ்வு

அமெரிக்காவில் 95வது நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தின் போது, ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

30 views

கனமழையால் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவின் நோவா ஸ்கோடியா பகுதியில் கனமழையால் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

22 views

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் - பனிப்பொழிவை ரசிக்கும் மக்கள்

வடக்கு ஸ்பெயினில் கடும் குளிர் நிலவி வருகிறது. சாலைகள், மரங்கள், கட்டடங்கள் அனைத்தும் பனிப்பொழிவால் நிரம்பியுள்ளன.

21 views

சிறு கோளை தாக்கி திசை திருப்ப முயற்சி - நாசா நிறுவனம் அனுப்பும் விண்கலம்

விண்வெளியில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறு கோள் ஒன்றின் மீது மோதி அதை திசை திருப்ப, விண்வெளி கலம் ஒன்றை அமெரிக்காவின் நாசா நிறுவனம் இன்று அனுப்பியுள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.