"முறைகேடுகள் களையப்படும்"- ஸ்டாலின்
பதிவு : நவம்பர் 15, 2021, 09:37 AM
மழை, வெயிலில் குடையாக இருந்து எந்நாளும், மாநிலத்தை காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மழை, வெயிலில் குடையாக இருந்து எந்நாளும், மாநிலத்தை காப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உங்களில் ஒருவன் என முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை கனமழை பெய்துள்ளதாகவும், எனினும், 2015 ஆம் ஆண்டு போல் வெள்ளம் ஏற்படாமல் தடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். பருவ மழைக்கு முன்பே, வடிகால் மற்றும் நீர்நிலைகளை கண்காணித்து வந்ததாக கூறும் ஸ்டாலின், உடனடியாகவும், சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணத்தால் தாமதமாகவும் மீட்புப் பணி நடந்ததாக தெரிவித்துள்ளார்.  நவம்பர் 7-ஆம் தேதி முதல் மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து மீட்பு, நிவாரணம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முடுக்கியதாக சுட்டியுள்ள ஸ்டாலின், இருளர் சமூக மக்களை சந்தித்ததாகவும் கூறியுள்ளார். மழை, வெள்ள நேரத்தில், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரது பணியை நன்றியுடன் எடுத்துரைப்பதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  டெல்டா மாவட்டத்தில் சம்பா, தாளடி பயிர் பாதிப்பை ஆய்வு செய்ய 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைத்ததை சுட்டியுள்ள ஸ்டாலின், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, திருவாரூர், சீர்காழி, மயிலாடுதுறை பகுதிகளில் ஆய்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள், துறை வாரியாக செய்த முறைகேடுகளை ஆய்வு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வெள்ள பாதிப்பை தவிர்க்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து அரசாணை வெளியிட்டதையும், ஒவ்வொரு திட்டத்திலும் அதிமுகவினரின் முறைகேடுகளை களைந்து, மக்களோடு இருந்து மாநிலத்தை காப்போம் என்றும் கடிதத்தில் உறுதி அளித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

78 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

38 views

பிற செய்திகள்

"தர்மபுரி மாவட்டம் பலமடைந்துள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

7 views

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

12 views

அதிமுக அலுவலகத்தில் மீண்டும் ஒருவர் மீது தாக்குதல்

அதிமுக தலைமை அலுவலகத்தில், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் ஒருவர் தாக்கப்பட்டார்.

12 views

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

இரவு 7மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Night Headlines | Thanthi TV

26 views

வரும் 7ஆம் தேதி அதிமுக தேர்தல் - ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

17 views

அதிமுக அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு

அதிமுக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியதாக கட்சியின் அலுவலக மேலாளர் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.