ஊழியர் மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் - கண்டித்து 180 டாஸ்மாக் கடைகள் அடைப்பு
பதிவு : நவம்பர் 15, 2021, 01:14 AM
கோவையில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவையில் டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். துடியலூரை அடுத்துள்ள இடிகரை டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வரும் சிதம்பரம் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால்  தாக்கி அவரிடமிருந்து கைப்பை , செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். பலத்த காயம் அடைந்த சிதம்பரம் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்புடைய மர்மநபர்கள் மீது நடவடிக்கை 
எடுக்க கோரியும் கோவை மாவட்ட வடக்கு பகுதியில் உள்ள 180 டாஸ்மாக் கடைகளையும் மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால்
மதுபாட்டில்கள் வாங்க வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.