சாய தொழிற்சாலையில் விபத்து - கழிவு நீரை சுத்தம் செய்ய முயன்ற 2 பேர் பலி
பதிவு : நவம்பர் 15, 2021, 01:11 AM
சாய தொழிற்சாலையில் கழிவுநீரை சுத்தம் செய்ய முயன்ற இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
திருப்பூர், காந்திநகர் வித்தியாலயம் அருகில்  தனியாருக்கு சொந்தமான சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கழிவு நீரை சேமித்து வைக்கக்கூடிய தொட்டியில் சுத்தம் செய்யும் பணியில் 5 நபர்கள்  ஈடுபட்டுள்ளனர் . அப்போது வடிவேலு என்ற நபருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே உள்ளே இருந்தவர்கள் சத்தம் எழுப்பியதையடுத்து வெளியில் இருந்த நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் என்பவரும் , நிறுவனத்தின் எலக்ட்ரிசியன் ராஜேந்திரன் என்பவரும் காப்பாற்ற சென்றுள்ளனர். இதில் அனைவரும் மயங்கி விழுந்த நிலையில் அருகில் உள்ளவர்கள் தீயனைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தொட்டிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள்,மயக்க நிலையில் இருந்தவர்களை மீட்டுள்ளனர்.இதில் விஷவாயு தாக்கி வடிவேலு மற்றும் தினேஷ் உயிரிழந்துள்ள நிலையில் 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,


பிற செய்திகள்

"குழந்தைகளுடன் தவிக்கிறோம்" - கடலூர் மக்கள் வேதனை

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

27 views

"அண்ணாமலை விளம்பரத்திற்காக உதவி செய்பவர்"

பாஜகவின் மிரட்டலுக்கு திமுகவின் கடைக்கோடி தொண்டர்கள் கூட அஞ்ச மாட்டார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

11 views

மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஆய்வு - மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் முதலமைச்சர்

சென்னை அருகே செம்மஞ்சேரியில் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

9 views

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கைகள் - முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

7 views

மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்து - 12 மினி பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை மெட்ரோ ரயில்நிலையங்களில் மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

16 views

"வேளச்சேரி வீட்டில் இருந்து திருமாவளவன் இப்படி வெளியே வந்தது ஏன்?"விசிக விளக்கம்

வேளச்சேரி என்றாலே வெள்ளச்சேரி என்பதை மழை தொடர்ந்து நிரூபித்து வருகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.