தென் மாநிலங்களின் பங்களிப்பு அவசியம்- அமித்ஷா
பதிவு : நவம்பர் 15, 2021, 01:08 AM
மாற்றம் : நவம்பர் 15, 2021, 07:24 AM
குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க போக்சோ வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.
தென் மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் திருப்பதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதுச்சேரி, ஆந்திரா,கர்நாடக மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா,தென்னிந்திய மாநிலங்களின்  பங்களிப்பு இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை என தெரிவித்தார்.மாநில மொழிகளையும் மதிப்பதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் இன்றைய ஆலோசனைக் கூட்டத்திலும் அனைத்து மாநிலங்களின் மொழியையும் மொழிமாற்றம் செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில முதலமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இந்திய தண்டனைச் சட்டம் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணியை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக தெரிவித்தார்.குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என தெரிவித்த அமித்ஷா, போக்சோ வழக்குகளில் ஒருபோதும் சமரசத்திற்கும் இடம் இருக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.

பிற செய்திகள்

பெண் எம்.பிக்கள் புடைசூழ நிற்கும் சசி தரூர் - "மக்களவை வசீகரமான இடம் இல்லையா?"

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை எம்.பி சசி தரூர், பெண் எம்.பிக்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

14 views

எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே 4 நிமிடங்களில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில், கடும் அமளிகளுக்கு இடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

56 views

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

46 views

மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்

பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...

17 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

17 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.