நடிகர் சூர்யாவிற்கு திருமாவளவன் பாராட்டு
பதிவு : நவம்பர் 14, 2021, 06:17 PM
ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் விளிம்பு நிலை மக்களின் இன்னல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக நடிகர் சூர்யாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டி உள்ளார்.
ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் விளிம்பு நிலை மக்களின் இன்னல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக நடிகர் சூர்யாவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,..ஜெய்பீம் திரைப்படத்தைத் தயாரிக்கவும் நடிக்கவும் முன்வந்து, தனது சமூகப் பொறுப்புணர்வை நடிகர் சூர்யா வெளிப்படுத்தி உள்ளதாக கூறி உள்ளார். எளியோருக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை மிகத் துல்லியமாக ஜெய்பீம் திரைப்படம் அம்பலப்படுத்தியுள்ளது என்றும், தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிராக ஆட்சி நிர்வாக அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை இத்திரைப்படம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்றும், சட்டம், அதிகாரம் போன்றவற்றின் பயன்பாடு குறித்து பெரும் விவாதத்தை பொதுவெளியில் உருவாக்கியிருக்கிறது என்றும் திருமாவளவன் கூறி உள்ளார்.
சந்துரு போன்ற துணிச்சல்மிக்க வழக்கறிஞர்கள் மீது இன்று ஊபா சட்டம் பாய்வதாகவும், இத்தகைய சூழலில், இத்திரைப்படம் வெளிவந்து சமூகத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் திருமாவளவன் கூறி உள்ளார்.தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

539 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

101 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

44 views

“’ரவுடி பேபி’ சூர்யாவை ஏன் கைது செய்யல..?“ - சாலையில் கதறி அழுத பெண்கள்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேபி சூர்யா-வை கைது செய்யக்கோரி பெண்கள் சிலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

18 views

பிற செய்திகள்

'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு விருது - பினாராயி விஜயன் வழங்கினார்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கேரள அரசின் 51வது மாநில திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

5 views

51வது மாநில திரைப்பட விருது வழங்கும் விழா - திரை நட்சத்திரங்களுக்கான கேரள அரசின் விருது

51வது மாநில திரைப்பட விருது வழங்கும் விழா - திரை நட்சத்திரங்களுக்கான கேரள அரசின் விருது

73 views

"வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி"- கடிதம் மூலம் நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு

மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

16 views

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மறைவு - வெற்றிப் படங்களின் நடன இயக்குநர் சிவசங்கர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடன இயக்குநர் சிவசங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். திரையுலகில் அவர் ஜொலித்த தருணங்களை நினைவுகூரும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

128 views

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது - அசுரன் படத்திற்காக நடிகர் தனுஷ் வென்றார்

பிரிக்ஸ் அமைப்பின் சிறந்த நடிகருக்கான விருது, அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

15 views

ஜெயில் - திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கு; "ஒரு வாரத்தில் பதில் கூற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.

183 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.