காற்று மாசுபாடு டாப் 10 நகரங்கள்
பதிவு : நவம்பர் 14, 2021, 01:34 PM
உலகிலேயே காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி முதலிடத்தில் உள்ளது.
உலகிலேயே காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் இந்திய தலைநகரமான டெல்லி முதலிடத்தில் உள்ளது. டாப்-10 இடங்களில் இடம்பிடித்துள்ள நகரங்களின் பட்டியலை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். டெல்லி அருகே உள்ள வட மாநிலங்களில் அறுவடைக்கு பிறகு காய்ந்த பயிர்கள் எரிக்கப்படுவதும், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையும் காற்று மாசுபடுதலுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், டெல்லியில் அடுத்த மூன்று நாட்களுக்கு கடும் புகை மூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை டெல்லி மக்கள் மிக மோசமான காற்றை சுவாசிக்க நேரிடுவதாக டெல்லி காற்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தீபாவளிக்கு அடுத்த எட்டு நாள் காற்று மாசுபடுதல் அங்கு அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த காலநிலை குழு நடத்திய ஆய்வில் காற்று தரக் குறியீடு  படி, உலகிலேயே காற்று மாசுபாடு அதிகமுள்ள 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. இதை தொடர்ந்து, பாகிஸ்தானின் லாகூர் நகர் இரண்டாவது இடமும், சீனாவின் செங்டூ நகர் மூன்றாவது இடமும், மற்றொரு இந்திய நகரமான மும்பை 4 வது இடத்திலும் உள்ளன. 


தொடர்புடைய செய்திகள்

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

526 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

99 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

52 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

42 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

30 views

பிற செய்திகள்

பெண் எம்.பிக்கள் புடைசூழ நிற்கும் சசி தரூர் - "மக்களவை வசீகரமான இடம் இல்லையா?"

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் மக்களவை எம்.பி சசி தரூர், பெண் எம்.பிக்களுடன் இணைந்து எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

15 views

எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே 4 நிமிடங்களில் வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்

நாடாளுமன்றத்தில், கடும் அமளிகளுக்கு இடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

56 views

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

#BREAKING : ராஜ்யசபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்

46 views

மகள்களையும், மருமகள்களையும் கொண்டாடும் கிராமம் - வீட்டு முன்பு பெண்களின் பெயர்பலகைகள்

பெண் பிள்ளைகளையும், தங்கள் வீட்டு மருமகள்களையும் கொண்டாடி மகிழ்கிறது, ஹரியானாவின் மய்யட் கிராமம்... இதற்காக அந்த கிராமம் எடுத்து வரும் முயற்சி என்ன என்பதை பார்க்கலாம்...

17 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

17 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.