"பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க தயார் : 1947 ஆம் ஆண்டு என்ன போர் நடந்தது?" - கங்கனா சர்ச்சை
பதிவு : நவம்பர் 14, 2021, 02:23 AM
1947ஆம் ஆண்டு கிடைத்தது சுதந்திரமல்ல பிச்சை என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள கங்கனா, தான் கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டால் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ள கங்கனா, 2014ஆம் ஆண்டே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததாகவும், 1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கிடைத்தது பிச்சை என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதோடு,  கங்கனாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கங்கனா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன. இந்நிலையில், 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகம் நடந்ததை நான் அறிவேன்,  ஆனால்  1947 ஆண்டு என்ன போர் நடந்தது என கங்கனா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதனை தம்மிடம் விளக்கினால் தாம் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

6 views

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு | Maanaadu | Venkat Prabhu Interview

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு

6 views

"ஆறாக பாய்கிறேன்..." - "ஜாஸ்பர்" திரைப்படத்தின் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜாஸ்பர் திரைப்படத்தின் "ஆறாக பாய்கிறேன்" பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.

274 views

'மாநாடு' படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

15 views

மகனுடன் சேர்ந்து 'மகான்' டப்பிங் பணிகளை முடித்த விக்ரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது.

10 views

இணையத்தை கலக்கும் தனுஷின் பாடல்

தனுஷ் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள "அத்ரங்கி ரே" திரைப்படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் வெளியாகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.