"குஜராத்தியை விட இந்தி அதிகம் பிடிக்கும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
பதிவு : நவம்பர் 14, 2021, 02:16 AM
தாய்மொழியான குஜராத்தியை விட, இந்தி மொழியை அதிகம் விரும்புவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவரும்,மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றார். வாரணாசியில் நடைபெற்ற தேசிமொழி சம்மேளன கூட்டத்தில் பேசிய அவர், குஜராத்தி மொழியை விட இந்தி தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அனைவரும் சேர்ந்து தேசிய மொழியை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அமித்ஷா, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தாய் மொழியில் பேசுங்கள், இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்தார். தேசிய மொழிக்கும், தாய் மொழிக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

"ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் புதிய உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

9 views

திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

19 views

ஒமிக்ரான் வைரஸ் - மத்திய அரசு அறிவுறுத்தல் | Omicron virus

ஒமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து, கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது..

15 views

உலக அரங்கில் முத்திரை பதிக்கும் இந்தியர்கள்... டுவிட்டரின் சி.இ.ஓ - வெற்றி பயணம்

டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவில் பிறந்தவரான பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் அவர்? விரிவாக பார்க்கலாம்

22 views

யானைகள் விபத்து...உறுதியளித்த ரயில்வே... Southern Railway

வரும் காலத்தில் யானைகள் ரயில்களில் அடிபடுவதைத் தடுக்க, மாநில வனத் துறைகளுடன் ஒருங்கிணைந்து அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

10 views

சஸ்பெண்ட் முடிவை நான் எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

மாநிலங்களவை தலைவரான நான் சஸ்பெண்ட் முடிவை எடுக்கவில்லை - வெங்கையா நாயுடு

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.