அரசு பேருந்துகளில் பாட்டு - கர்நாடக அரசு தடை
பதிவு : நவம்பர் 14, 2021, 02:13 AM
கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணிகள் சத்தமாக பாட்டு கேட்க தடை விதித்ததுடன், மீறினால் பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பேருந்துகளில் செல்லும் பயணிகள் தங்களது செல்போனில் சத்தமாக பாட்டு கேட்பதாலும், காணொலி பார்ப்பதாலும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதாக கூறியதுடன், அரசு பேருந்துகளில் செல்போன்களில் சத்தமாக பாட்டு கேட்கவும்,  காணொலியை பார்க்கவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக போக்குவரத்து துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை உடனடியாக பின்பற்ற பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கர்நாடக போக்குவரத்துறை சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. அதில், கர்நாடக பொதுப்போக்குவரத்து சட்டம் 1989, பிரிவு 94ன் படி பேருந்துகளில் செல்வோர் ரேடியோவில் பாடல்களை இசைப்பதும், சத்தமாக பாடுவதையும், இசைக்கருவிகள் இசைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுவோரை,  எந்த இடத்திலும் இறக்கி விடலாம் என்ற தகவலையும் பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும், வீடியோ கோச் பேருந்துகளில் போடப்படும் காணொளி மற்றும் பாடல்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் சுற்றறிக்கையில் இடம்பெறவில்லை.


பிற செய்திகள்

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

7 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

16 views

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

31 views

கொரோனா பரவல் - கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

22 views

மோடி செல்லும் விமானத்தின் மதிப்பு ரூ.8,000 கோடி - பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பயணிக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன் பற்றி பேச தயங்குவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.