மணிப்பூரில் துணை ராணுவ வாகனம் மீது தாக்குதல் - ராணுவ அதிகாரி, குடும்பத்தினர் உயிரிழப்பு
பதிவு : நவம்பர் 14, 2021, 02:07 AM
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீர‌ர் மற்றும் அவரது 8 வயது மகன் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.
மணிப்பூர் மாநிலம், சூரசந்த்பூர் (Churachandpur) மாவட்டத்தில் உள்ள மியான்மர் எல்லைப் பகுதியில் அசாம் ரைபில்(Assam Rifles) படையினர் சென்ற வாகனத்தின் மீது, தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனங்களை சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இதில் அசாம் ரைபில் படைப்பிரிவின் அதிகாரி திரிபாதி, அவருடைய மனைவி மற்றும் 8 வயது மகன் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களுடன் பாதுகாப்புக்கு சென்ற 4 வீர‌ர்களும் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த வீர‌ர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என கூறியுள்ளார். இதுஒரு கோழைத்தனமான தாக்குதல் எனவும், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பாதுகாப்புத்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங், டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

0 views

வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மக்களவையில் விவாதம் இன்றி நிறைவேறியுள்ளது..

7 views

அனைத்து விவகாரங்களையும் பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது - பிரதமர் மோடி

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்..

8 views

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம் - மத்திய உள்துறை செயலாளர் ஆலோசனை

விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ளது.

19 views

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

குஞ்சனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆற்றுக்குள் விழுந்த இரண்டு வீடுகள்

31 views

கொரோனா பரவல் - கர்நாடகாவில் புதிய கட்டுப்பாடுகள்

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.