விளையாட்டு வீர‌ர்களுக்கு தேசிய விருது - குடியரசு தலைவர் வழங்கினார்
பதிவு : நவம்பர் 14, 2021, 02:05 AM
விளையாட்டுத் துறையில் சிறந்த வீரர்களுக்கு, தேசிய விருதுகளை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.இதில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீராஜ் சோப்ரா, மல்யுத்த வீரர் ரவிக்குமார், கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ்,ஹாக்கி வீரர்கள் மன்ப்ரீத் சிங், ஸ்ரீஜேஷ், கால்பந்து வீரர் சுனில் சேத்திரி உள்ளிட்டோருக்கு விளையாட்டு துறையின் உயரிய விருதான தயான் சந்த் கேல் ரத்னா வழங்கப்பட்டது.இதேபோல் பாரா பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், பாரா துப்பாக்கி சுடுதல் வீரர்கள் மணீஷ் நர்வால், அவானி லெஹரா உட்பட 12 பேருக்கு கேல் ரத்னா விருதுகளை வழங்கி  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வீரர்கள் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.இதேபோல் ஹாக்கி வீராங்கனைகள் மோனிகா வந்தனா கட்டாரியா, கிரிக்கெட் வீர‌ர் ஹிகர் தவான் உள்ளிட்ட 35 பேருக்கு அர்ஜூனா விருதுகளை வழங்கி குடியரசு தலைவர் கவுரவித்தார்.


பிற செய்திகள்

இன்று 2-வது டெஸ்ட்... களமிறங்கும் கோலி

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

34 views

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

14 views

ஐபிஎல் 2022 - எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் ?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

20 views

முதன்முறையாக ரெய்னாவை கைவிட்ட சென்னை

ஐபிஎல்லில் முதன்முறையாக சென்னை அணியில் ரெய்னா தக்கவைக்கப்படாதது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

19 views

CSK - வின் அடுத்த கேப்டன் ஜடேஜா?

ஐபிஎல்லில் சென்னை அணியில் தோனியைவிட அதிக தொகைக்கு ரவீந்திர ஜடேஜா தக்கவைக்கப்பட்டுள்ளார்.

16 views

IPL; எந்த வீரர்கள், எவ்வளவு விலைக்கு தக்கவைப்பு?

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

195 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.