முல்லை பெரியாறு - தமிழக அரசு விளக்க மனு
பதிவு : நவம்பர் 13, 2021, 06:56 PM
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு தவறான தகவல்கள் அளித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு தவறான தகவல்கள் அளித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டள்ள மனுவில், முல்லை பெரியாறு அணையை கைவிட்டு, புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என மறுக்கப்பட்டுள்ளது. அணையின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் மட்டுமே என எந்த அறிவியல் ஆதாரமும் இன்றி கேரள அரசு கூறி வருவதாகவும், அணையின் ஆயுட்காலம் என்பது பராமரிப்பு, புனரமைப்பு பணிகளுடன் தொடர்புடையது என்றும் விளக்கம் அளித்துள்ளது. இந்த அணையால் 50 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கற்பனையானது என சுட்டிக்காட்டியுள்ள தமிழக அரசு அணை பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசு தவறான தகவல் பரப்பி வருவதாகவும் மனுவில் கூறியுள்ளது. மேலும் அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரள அரசு திட்டமிட்டு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.  இந்த விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணைய அறிக்கையின்படி தமிழக அரசு இயங்கி வருவதாகவும், ஆனால் கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக செயல்படுவதாகவும் விளக்க மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

201 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

107 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

22 views

பிற செய்திகள்

"தர்மபுரி மாவட்டம் பலமடைந்துள்ளது" - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெற உழைக்க வேண்டும் என திமுக தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

8 views

தொடர் கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து பொதுமக்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

7 views

"தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு"

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரதுறை, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது

836 views

தி.மு.க. சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

12 views

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று

மகாராஷ்டிராவில் ஒருவருக்கு ஓமிக்ரான் கொரோனா தொற்று

14 views

அடகு கடையில் கை வைத்த கொள்ளையர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நகை மற்றும் அடகு கடையில் இருந்து சுமார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.