மீண்டும் சர்ச்சையை கிளப்பிய கங்கனா
பதிவு : நவம்பர் 13, 2021, 05:32 AM
இந்தியாவிற்கு 2014ஆம் ஆண்டு தான் சுதந்திரம் கிடைத்தது என்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடிக்கடி அதிரடி கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்ளும் கங்கனா பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
இந்தியாவிற்கு 2014ஆம் ஆண்டு தான் சுதந்திரம் கிடைத்தது என்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அடிக்கடி அதிரடி கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்ளும் கங்கனா பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு... இதுவரை நான்கு முறை தேசிய விருது... ஐந்து முறை பிலிம்பேர் விருது... கலை சேவைக்காக பத்மஸ்ரீ என விருதுகள் பலவற்றை குவித்து... பாலிவுட்டின் ஜான்சி ராணியாக வலம் வருபவர், கங்கனா ரணாவத்... மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றிருந்தார், கங்கனா. பெண் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் , வித்தியாசமான கதை தேர்வு என பன்முக கதாபாத்திரங்களில் நடித்து, தனது நடிப்பு திறமையால் பிரபலமடைந்த போதும்... அவ்வபோது அவர் வெளியிடும் சர்ச்சை கருத்துக்களே படங்களை காட்டிலும் தேசிய அளவில் அவரை பேசும் பொருளாக்கியது...அப்படி சமீபத்தில் இந்திய சுதந்திர தினம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து... தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது... வழக்கமாக டுவிட்டர் மூலம் சர்ச்சை புயலை கிளம்பும் கங்கனா, இம்முறை தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியின் மூலம் பலரது கண்டனங்களை சம்பாதித்துள்ளார். 1947 ஆம் ஆண்டு நமக்கு கிடைத்தது சுதந்திர அல்ல பிச்சை என்றும், 2014 ஆம் கிடைத்ததே சுதந்திரம் என்றும் கங்கனா கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கங்கனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
கங்கனாவை பொறுத்தவரை சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல... சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதும்... விமர்சனத்திற்குள்ளாவதும் வாடிக்கையாக கொண்டவர், கங்கனா. தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக முன்னணி நடிகை நடிகர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தது...இதோடு, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு, மும்பை போலீசார் குறித்த சர்ச்சை கருத்து...மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என குறிப்பிட்டது... என கங்கனாவின் சர்ச்சை பட்டியல் பெரிது..கடந்த மே மாதம் மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறையின் போது, பிரதமர் மோடி மம்தாவை ஒடுக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் டூவிட் போட்டு அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தினார், கங்கனா. மேற்கு வங்கத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக கங்கனாவின் டுவிட்டர் கணக்கு அதன் பிறகு முடக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி அவரது அலுவலகம் மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்ட போது, தனது அலுவலகத்தை ராமர் கோயிலுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தது தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று சொல்பவர்கள் அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டும் என கூறியது...  வரை கங்கனாவின் சர்ச்சை பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது.. இது மட்டுமின்றி தனி நபர் மீதும் சரமாரியான கருத்துக்களை கூறி தனி நபர் தாக்குதலிலும் கங்கனா ஈடுபடுவது, அவரை என்றும் சர்ச்சை வலையத்திற்குள்ளேயே வைத்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

211 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

120 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

27 views

பிற செய்திகள்

"நான் பார்த்த முதல் முகம் நீ..." வலிமை பாடல் வெளியீடு

நடிகர் அஜித்குமார் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் வரிகளில் உருவான வலிமை படத்தின் 2 ஆவது பாடல் வெளியாகி உள்ளது...

262 views

"ரொம்ப வலியை தாங்கிக்கிட்டு தான் பண்ணோம்..!!" - நடிகர் G.V. பிரகாஷ்

"ரொம்ப வலியை தாங்கிக்கிட்டு தான் பண்ணோம்..!!" - நடிகர் G.V. பிரகாஷ்

9 views

காதலன் மீது புகார் கொடுத்த ஜூலி - வேறு ஒருவருடன் தொடர்பு என குற்றம்சாட்டும் காதலன்

பொருட்களை வாங்கிக் கொண்டு ஏமாற்றினார் என நடிகை ஜூலி புகார் அளித்த உடனே பொருட்களை எல்லாம் போலீசில் ஒப்படைத்த காதலன், விசாரணையின் போது சொன்ன தகவல்கள் போலீசாரையே குழப்பமடைய வைத்திருக்கிறது....

437 views

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

தோனியை 'தல'னு சொல்றதுனால அஜித்துக்கு கோவமா...? வெங்கட் பிரபு பதில்

21 views

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு | Maanaadu | Venkat Prabhu Interview

மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் கதை சொல்லும் வெங்கட் பிரபு

11 views

"ஆறாக பாய்கிறேன்..." - "ஜாஸ்பர்" திரைப்படத்தின் பாடலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்

ஜாஸ்பர் திரைப்படத்தின் "ஆறாக பாய்கிறேன்" பாடலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு உள்ளார்.

325 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.