சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு - ஷி ஜின்பிங்கிற்கு நிரந்தர அதிபர் பதவி
பதிவு : நவம்பர் 13, 2021, 02:49 AM
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு முழு அதிகாரம் அளிக்கும் வரலாற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.
1921இல் தொடங்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, 1949இல் மாவோ தலைமையில் சீனாவில் செம்புரட்சியை உருவாக்கி, அதிகாரத்தை கைப்பற்றி இன்று வரை ஆட்சி செய்து வருகிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தலைநகர் பெய்ஜிங்கில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு, வியாழன் அன்று நடைபெற்றது. நூறு ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய சாதனைகள் மற்றும் வரலாற்று அனுபவம் பற்றி ஒரு சிறப்பு தீர்மானம் இதில் நிறைவேற்றப்பட்டது.
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை, மாவோவிற்கு இணையாக நிறுவி, வாழ்நாள் முழுவதும் அவர் சீனாவின் அதிபராக தொடர இந்தத் தீர்மானத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.சீன பாணி சோஷியலிசத்தை ஷி ஜின்பிங்கின் சிந்தனைகளின் அடிப்படையில் அமல்படுத்த உள்ளதாக இந்த தீர்மானம் உறுதி செய்துள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில், இத்தகைய தீர்மானம் இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.
1945இல் மாவோ சே துங் தலைமை பற்றியும், 1981இல் டெங் ஷியாபிங் தலைமை பற்றியும் இதே போன்ற வரலாற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 68 வயதான ஷி ஜின்பிங், இளம் வயதில் மாவோவின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி, கடும் துன்பங்களை அனுபவித்தார். 
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த ஷி ஜின்பிங்கின் தந்தை மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, 1968இல் சிறையில் அடைக்கப்பட்டார்.மாவோயின் செம்படையினர் ஷி ஜின்பிங்கின் வீட்டை தாக்கி, சூறையாடினர். ஷி ஜின்பிங்கின் சகோதரி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டார். 15 வயதான ஷி ஜின்பிங் பள்ளியில் இருந்து விலக்கப்பட்டு, ஒரு விவசாய பண்ணையில் பணி புரிய அனுப்பப்பட்டார். மாவோ காலமான பிறகு, ஷி ஜின்பிங்கின் குடும்ப சூழல் மேம்பட்டது. ஷி பொறியியல் பட்டம் பெற்று, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். படிப்படியாக வளர்ச்சியடைந்த ஷி, 2012இல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 2013இல் சீன அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தனது குடும்பத்தை வதைத்த மாவோவிற்கு இணையாக ஷி ஜின்பிங்  தற்போது சர்வ வல்லமை பொருந்திய தலைவராக உருவெடுத்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

201 views

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

107 views

கரூரில் வெளுத்து வாங்கும் கனமழை - மிதக்கும் குடியிருப்புகள்

கரூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

22 views

பிற செய்திகள்

உக்ரேன் மீது படை எடுக்க ரஷ்யா ஆயத்தம் - எல்லைப் பகுதியில் 1.75 லட்சம் வீரர்கள்

உக்ரேன் மீது ரஷ்யா படை எடுக்க தயாராகி வருகிறது. இதைப் பற்றி ரஷ்ய அதிபர் புட்டினுடன், நீண்ட விவாதம் நடத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

13 views

டிவிட்டர் CEOஆக பதவியேற்றார் பரக் அகர்வால் - டிவிட்டர் நிர்வாக குழுவில் அதிரடி மாற்றங்கள்

டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள பரக் அகர்வால், நிர்வாகத்தில் அதிரடியாக பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார்.

174 views

"ஒமிக்ரான் பற்றி அச்சம் தேவையில்லை" - WHO விஞ்ஞானி தகவல்

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பற்றி அச்சப்படத் தேவையில்லை என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

20 views

4 பேரை சுட்டுக் கொன்ற பள்ளி மாணவன்

அமெரிக்காவின், மிச்சிகனில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில், சக மாணவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர்.

8 views

ஐ.நா. தலைமை அலுவலகத்திற்கு - துப்பாக்கியுடன் வந்த முதியவர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐநா பொதுசபையின் தலைமையகத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

இலங்கை எம்.பி. சரத் பொன்சேகா சர்ச்சை பேச்சு

மாவீரர் தின அனுசரிப்பை இலங்கை அரசு தடை செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.