மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கூட்டம்
பதிவு : நவம்பர் 13, 2021, 02:23 AM
பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த வருகிற 15 ஆம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பொருளாதார கட்டமைப்பினை வலுப்படுத்த வருகிற 15 ஆம் தேதி அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார். இது குறித்து பேசிய நிதித்துறை செயலாளர் சோமநாதன், காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என கூறியுள்ளார். உலக நாடுகளில் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலமாக அந்நிய நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா முன்னோடியாக உள்ளது. அதனை மேலும் வலுப்படுத்தக்கூடிய விதமாக முதலீடு செய்ய வரும் நிறுவனங்களுக்கு நிலங்கள் ஒதுக்குவதில் உள்ள கட்டுப்பாடுகளை எளிமையாக்குவது குறித்தும், நீர் ஆதார பயன்பாடுகளில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் உடனான சந்திப்பில்,  தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் மாநில நிதித்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


பிற செய்திகள்

நாடாளுமன்றத்தில் "எதிர்க்கட்சிகளின் குரல் நெரிக்கப்படுகிறது" - திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் நெறிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாக, திமுக மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

9 views

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சிறை தண்டனைக்கு வகை செய்யும் சட்டப்பிரிவு" - திமுக எம்பி கவுதம சிகாமணி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதாவில் நீண்ட ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என, திமுக எம்பி கவுதம சிகாமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

10 views

"தமிழகம் மருத்துவ சுற்றுலா மையமாக திகழ்கிறது" - அதிமுக எம்.பி ரவீந்திரநாத்

மருத்துவ சுற்றுலா மையமாக தமிழகம் திகழ்வதாக, அதிமுக எம்.பி ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

8 views

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா "அவசர, அவசரமாக நிறைவேற்ற துடிப்பது ஏன்?" - காங்.எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி

உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப மசோதா பாகுபாடு கொண்டது என, காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

10 views

உதவி இனபெருக்க தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா "சில குறைபாடுகளை களைய வேண்டும்" - இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி

உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப ஒழுங்குபடுத்துதல் மசோதாவில் உள்ள சில குறைபாடுகளை களைய வேண்டும் என, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. நவாஸ் கனி வலியுறுத்தியுள்ளார்.

13 views

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

நாடாளுமன்ற தேர்தல் 2024 - வியூகம் வகுக்கும் மம்தா

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.