H-4 அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் தடையின்றி பணி புரியலாம்
பதிவு : நவம்பர் 12, 2021, 09:39 PM
ஹெச்.1.பி விசா வைத்திருப்பவர்களின் குடும்பத்தினர், அமெரிக்காவில் பணி புரிய, ஜோ பைடன் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஹெச்.1.பி விசா வைத்திருப்பவர்களின் குடும்பத்தினர், அமெரிக்காவில் பணி புரிய, ஜோ பைடன் அரசு அனுமதி அளித்துள்ளது.

வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணி புரிய ஹெச்.1 பி விசா அளிக்கப்படுகிறது. பல லட்சம் இந்தியர்கள், இதன் மூலம் அமெரிக்காவில் பணி புரிகின்றனர்.
இவர்களின் மனைவி அல்லது கணவருக்கு ஹெச்-4 விசா அளிக்கப்படுகிறது. ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணி புரிவதற்கு டிரம்ப் ஆட்சியில் பல தடைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் சங்கத்தின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர, வழக்கு தொடுத்துவர்களுடன் அமெரிக்க அரசு ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, இனி ஹெச்-4 விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் பணி புரிய முழு அனுமதி அளிக்கப்படும் என்று ஜோ பைடன் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பல லட்சம் குடும்பங்கள் இதனால் பலனடையும் என்று கருதப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.