ஆப்கன் நிலவரம் பற்றி இந்தியா நடத்திய மாநாடு - ஆப்கன் தலிபான் அரசு வரவேற்பு
பதிவு : நவம்பர் 12, 2021, 08:55 PM
ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி, புது டெல்லியில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு மாநாட்டை தலிபான் அரசு வரவேற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் நிலவரம் பற்றி, புது டெல்லியில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு மாநாட்டை தலிபான் அரசு வரவேற்றுள்ளது.

நவம்பர் 10 அன்று, பிராந்திய பாதுகாப்பிற்கான டெல்லி மாநாடு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடைபெற்றது.
ரஷ்யா, ஈரான், மற்றும் 5 மத்திய ஆசிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சீனா இதில் பங்கேற்க மறுத்துவிட்டன. இந்த மாநாட்டை வரவேற்றுள்ள தலிபான் அரசு, இதில் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் சிறந்த முறையில் நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதாக ஆப்கன் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். டெல்லி மாநாட்டில், ஆப்கன் நிலவரம் பற்றியும், எதிர்கொண்டுள்ள சவால்கள் பற்றியும் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.